ஏமாறாதீர்..! நாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு எந்த ஒரு ஏஜென்டுகளையும் நியமிக்கவில்லை - ராஜ்கமல் பிலிம்ஸ்..!

 
1

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த அறிக்கையில்,"நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்" என தெளிவாகக் கூறியுள்ளது. அத்துடன் அவர்களது பெயரை பயன்படுத்தி, பட வாய்ப்பு தருவதாகக் கூறி நடைபெறும் மோசடிகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பின்னணியாக, தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் பெரிய திரைப்படங்கள் அதிகமாவே காணப்படுகின்றன. அந்தவகையில் சமூக வலைத்தளங்கள் போன்ற செயலிகளில், "ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படங்களுக்கு நடிகர் மற்றும் நடிகை தேவை என போலியான தகவல்கள் பரவியதாக புகார்கள் எழுந்துள்ளன.

 இந்த நிலையில், சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் நபர்கள், எந்த ஒரு வாய்ப்பையும் சரி பார்க்காமல் பணம் செலுத்துவது, தனிப்பட்ட தகவல்களை பகிர்வது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் இந்த அறிவிப்பு வலியுறுத்துகின்றது.

From Around the web