உங்கள் பொங்க சோறும் வேண்டாம்... இரண்டாம் பாகமும் வேண்டாம் - ‘கல்கி’ படத்தை கலாய்த்த புளூசட்டை மாறன்..!

 
1

யாருடைய படமாக இருந்தாலும் விமர்சனங்களை சரமாரியாக கிழித்து தொங்கவிடும் புளூசட்டை மாறன் இந்த  ’கல்கி 2898 ஏடி’ படத்திற்கும் நெகட்டிவ் வசனங்களை கொடுத்துள்ளார்.

புராணத்தில் உள்ள நான்கு கேரக்டர்களை எடுத்துக்கொண்டு ஒரு கற்பனை உலகத்தை அமைத்து அந்த கற்பனை உலகத்திற்குள் ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் எடுக்காமல், ஒரு பெரிய தயாரிப்பாளர் சிக்கிவிட்டார், அவருடைய பணத்தை கறப்பதற்காகவே ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை எடுத்துள்ளார் என புளூசட்டை  மாறன் இந்த படத்தின் விமர்சனத்தை தொடங்கியுள்ளார்.

இன்றைய காலத்திலிருந்து 800 வருடங்களுக்கு பிந்தைய காலகட்டத்தை காட்டும் போது அந்த காலகட்டத்திற்குள் ரசிகர்களால் உள்ளே போக முடியவில்லை, பல ஆங்கில படங்களை பார்த்த ஞாபகம் தான் வருகிறது. 2898 ஆம் ஆண்டு கால கட்டத்தை நம்ப வைப்பதற்கு எந்த முயற்சியும் இயக்குனர் செய்யவில்லை.

இந்த படத்தைப் பொருத்தவரை பிரபாஸ் தான் ஹீரோ என்று யாரும் நினைத்து செல்ல வேண்டாம், அமிதாப் பச்சன் ஹீரோ என்று நினைத்து படம் பாருங்கள், அவரை பாலோ செய்தால் தான் ஓரளவுக்கு இந்த படம் புரியும்.

ஒரு படத்தில் வில்லன் கேரக்டர் மிகவும் வலுவாக இருக்க வேண்டும், ஆனால் இந்த படத்தில் வில்லன் ஒரு வயசான தாத்தாவாக இருக்கிறார், சரி ஹீரோ - வில்லன் சந்திப்பார்கள் என்று பார்த்தால் கடைசி வரை சந்திக்கவே இல்லை.

ஹீரோ இந்த படத்தில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை, வில்லனுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை, இதை கேள்வி கேட்டால் இரண்டாம் பாகத்தில் பார்த்துக் கொள்வோம் என்று சொல்வார்கள், இதைத்தான் நாங்கள் சொல்கிறோம், நடந்தது நடந்து போச்சு, முதல் பாகத்தோடு தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் பொங்கல் சோறும் வேண்டாம், இரண்டாம் பாகமும் வேண்டாம், இரண்டாவது பாகத்தை தயவு செய்து எடுக்காதீர்கள்’ என்று புளூசட்டை மாறன் இந்த விமர்சனத்தை முடித்துள்ளார்.

From Around the web