ஒரு கலைஞனை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள் - வேதனையில் சிறகடிக்க ஆசை நடிகர்..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்‘சிறகடிக்க ஆசை’.இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

தற்போது சீரியலில் சத்யாவின் வீடியோவை ரோகினி எப்படியோ போராடி முத்துவின் மொபைலில் இருந்து எடுத்து விட்டார்.இந்த உண்மையை அறிந்த மீனா குடும்பத்தினர் ரொம்பவே அசிங்கப்பட்டார்கள். விஜயா, மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் ரொம்ப கேவலப்படுத்தி இருந்தார். பின் இந்த விஷயம் அறிந்த போலீஸ் சத்யாவை தேடுகிறது. உண்மை அறிந்த முத்து, மீனாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார்.
இதனால் சத்யா, தற்கொலை முயற்சி செய்தார். ஆனால், எப்படியோ முத்து அவரைக் காப்பாற்றி விட்டார்.

எப்படியாவது சத்யாவை வெளியில் கூட்டிட்டு வர வேண்டும் என்று வக்கீலை பார்த்து முத்து போராடிக் கொண்டிருக்கிறார். அந்த வக்கீல், முத்துவை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். 

இப்படி அடுத்து என்ன நடக்கும்? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பழனியப்பன். இதற்கு முன் இவர் படங்கள், சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது சிறக்கடிக்க ஆசை சீரியல் தான். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் பழனியப்பன் கலந்திருந்தார். அப்போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தைப் பற்றி அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

காரணம், அந்த விழாவில் அவர் யார்? அவர் எந்த சீரியலில் நடிக்கிறார்? என்ன செய்தார்? என்பது கூட சொல்லவில்லை. அது மட்டும் இல்லாமல் தொகுப்பாளர், விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு கூட இவரை பற்றி தெரியவில்லை. ஆனால், விருது கொடுத்து விட்டார்கள். இதைத்தான் இவர், யாருக்கு அவார்ட் கொடுக்கிறோம். எதற்கு அவார்டு கொடுக்கிறோம். அவார்டு வாங்குபவர் யார்? இதெல்லாம் தெரிந்து கொண்டு தான் கொடுக்க வேண்டும். தெரியவில்லை என்றால் ஒரு கலைஞனை கூப்பிட்டு அவமதிக்காதீர்கள். இது எனக்கு மட்டும் இல்லை சக கலைஞருக்கான பதிவு என்று ரொம்ப எமோஷனலாக கூறி இருக்கிறார்.

From Around the web