இதை யாரும் நம்ப வேண்டாம்..ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் தகவல் பொய்யானது..!
 

 
1
ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும் கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகரின் குடும்பத்தாருடன் புகைப்படக் காட்சி நடைபெற இருப்பதாகவும் மிக்க மகிழ்ச்சி தலைவா என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை அடுத்து ஒரு சில ஊடகங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது, சமூக வலைதளங்களில் இந்த செய்தியை ஏராளமான ரசிகர்கள் பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக வெளியான தகவலை அடுத்து மீண்டும் அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் தனது சமூக வலைதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்கள் சந்திப்பை நடத்துவார் என்று சமூக ஊடகங்களில் செஞ்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரசிகர்கள் உள்ள வாட்ஸ்அப் தளத்தில் நேற்று பகிர்ந்து உள்ளார். இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். மேலும் தலைவரின் அனுமதி இல்லாமல் இதுபோன்ற செய்தியை பகிர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

From Around the web