மிஸ் பண்ணிடாதீங்க..! இந்த வாரம் ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் ப்ளாக்பஸ்டர் படங்கள்..!
இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள திரைப்படம் ‘தேவரா’. இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.400 அளவில் வசூலிட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் வரும் நவம்பர் 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் காண முடியும்.
Apudapudu dhairyaniki thelidhu avasaraniki minchi thanu undakoodadhu ani… appudu bhayaniki theliyali, thanu ravalsina samayam ochindhi ani. Osthunnadu 🌊🐅
— Netflix India South (@Netflix_INSouth) November 5, 2024
Watch Devara on Netflix, on 8 November in Telugu, Tamil, Malayalam and Kannada. Coming soon in Hindi.#DevaraOnNetflix pic.twitter.com/8cBzZVqv0i
த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன திரைப்படம் வேட்டையன். இப்படம் தியேட்டரில் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தீபாவளி ரிலீஸ் படங்களால் வேட்டையன் படம் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டுள்ளதால் தற்போது ஓடிடிக்கு தாவி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஏ.ஆர்.எம்
டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ஏ.ஆர்.எம். இப்படத்தை ஜிதின் லால் இயக்கி இருந்தார். இப்படமும் வருகிற நவம்பர் 8-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
சிட்டாடெல் ஹனி பனி
சமந்தா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள வெப் தொடர் சிட்டாடெல் ஹனி பனி. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கி உள்ளனர். இதில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இந்த வெப் தொடர் வருகிற நவம்பர் 7ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.