இப்படி செய்திகள் போடாதீங்க..! வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது: மஞ்சிமா மோகன்

 
1

தனியார் யூடியூப் பாட்காஸட் ஒன்றில் பேசியுள்ள நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளதாவது:-

என்னுடைய திருமணம் தொடர்பான தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. திருமணத்துக்கு முன் நான் கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை என்றும் பல பொய்யான தகவல்கள் பரவின. எல்லோம் ஜோடிக்கப்பட்ட பொய்கள். இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை. பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். சிலர் ஏளனம் செய்தனர்.

திருமணத்துக்கு முன்பே இப்படியான காயப்படுத்தும் கருத்துகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பின் இது குறித்து கவலைப்பட்டிருக்கிறேன். அப்போது, இது போன்ற கமென்ட்ஸ்களை படித்து ஏன் வருத்தப்படுகிறாய் என கவுதம் என்னிடம் கேட்பார். நான் கவுதமுக்கு ஏற்ற ஜோடியில்லை என்ற கமென்ட்ஸ்களை பார்க்கும்போது வலிக்கும்.

அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன். ‘உன்னை எது தொந்தரவு செய்கிறது என்பதை என்னிடம் வெளிப்படையாக சொல். எனக்குத் தெரியும் என்று நினைத்து சொல்லாமல் மறைக்காதே. நீ சொன்னால் தான் எனக்குத் தெரியும்’ என்று கவுதம் கார்த்திக் சொல்வார். அவர் மிகவும் அன்பான மனிதர். ‘ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிகொள்ள வேண்டும், அப்போது தான் என்ன உணர்கிறார்கள் என்பது தெரியும். அதன் மூலம் தவறான புரிதல்களை களையமுடியும்’ என்பார்.

தம்பதியினர் தங்கள் சமூகவலைதளங்களில் திருமண புகைப்படங்களை பதிவிடுவதைப் பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோன்றும். எங்கள் திருமண அறிவிப்பு வெளியான பிறகு எல்லாமே சோசியல் மீடியாவாகிவிட்டது. நான் இப்போது பேசும்போது மிகவும் கவனமாக இருக்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நாம் பேசவில்லை என்றால் அதை வைத்தே நம்மை மதிப்பிடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

From Around the web