எங்க அப்பா பற்றி தப்பா பேசாதீங்க: ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் வேதனை..!
ஏ.ஆர். ரஹ்மான் வாழ்வில் அவர் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக இருக்கும் மோகினி வந்ததால் தான் சாய்ரா பானு வெளியேறிவிட்டார் என சமூக வலைதளங்களில் கண்டபடி பேசுகிறார்கள். அதை பார்த்து ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் மட்டும் அல்ல அவரின் பிள்ளைகளும் வேதனைப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஒரு குழந்தை மற்றும் தன் அப்பாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, வயதை தவிர இந்த இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம் என கேட்டிருக்கிறார் அமீன். எங்கப்பா ஒரு குழந்தை என்கிறார் அவர்.அப்பா பற்றி அமீன் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
என் அப்பா ஒரு லெஜண்ட். அவரின் வேலைக்காக மட்டும் அல்ல இத்தனை ஆண்டுகளாக அவருக்கு கிடைத்திருக்கும் மரியாதை, அன்புக்காகவும் தான். அவரை பற்றி பொய்யான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது வேதனை அளிக்கிறது.ஒருவரின் வாழ்க்கை மற்றும் லெகசி பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவம், மரியாதை நினைவில் இருக்கட்டும். தவறான தகவல்களை பரப்புவதை தயவு செய்து தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை காப்போம் என்றார்.
அமீனின் போஸ்ட்டை பார்த்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அப்பாவை பற்றி தரக்குறைவாக பேசுபவர்கள் தரம் கெட்டவர்கள். அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள். அவர்களை எல்லாம் திருத்த முடியாது அமீன். அப்பா பற்றி நமக்கு தெரியும். அவர் எந்த தவறான வழியிலும் செல்ல மாட்டார். அப்பாவை போன்றே கண்ணியமாக நடந்து கொள்கிறீர்கள்.
இந்த கடினமான நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் மூன்று பிள்ளைகளும் தன்மையாக நடந்து கொள்வதில் இருந்தே அவர்களின் வளர்ப்பு தெரிகிறது. பெருமையாக இருக்கிறது பாய் என ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏ. ஆர்.ரஹ்மானையும், மோகினியையும் சேர்த்து வைத்து பேசுவதை பார்த்து தான் பேரதிர்ச்சி அடைந்ததாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷாவும் தெரிவித்தார். மேலும் இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார் வந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.