அவரை பற்றி தெரியாமல் யாரும் பேசாதீங்க..! கொந்தளித்த விஜய் டிவி பிரபலம்!

நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு பெரிய துரோகம் செய்துவிட்டார்…அதை பற்றி வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும்…அதனால் இந்த ஜென்மத்தில் சிவகார்திகேயன் உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை என கூறி இருந்தார் இசையமைப்பாளர் இமான்.இது பல ரசிகர்களுக்கு மிக பெரிய ஷாக்கிங் செய்தியாக இருந்தது..இந்த தகவல் பெரிதும் பேசவும் படுகிறது…
இந்நிலையில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி அளித்திருக்கிறார்…அவர் பேசியது மக்கள் மத்தியில் இப்போது ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது..
இந்த இமானின் சர்ச்சை பற்றி பேசிய அவர் ஒருவர் பற்றி தெரியவில்லை என்றால் பேசவே கூடாது..வாயை மூடிட்டு இருக்கனும் என கூறி இருக்கிறார்…இப்படி சொல்லியது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறது…
அதனை போல அவர் விஜய் டிவியில் பணியாற்றிய காலதித்திலேயே சிவகார்த்திகேயன் உடன் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் அவரை பற்றி நன்கு தெரியும் என சொல்லியுள்ளார் தீபக் அவர்கள்.