யாரும் நம்பாதீங்க..! நான் நல்லா தான் இருக்கேன் - சிங்கம்புலி..!

 
1

சூர்யாவின் ‛மாயாவி', அஜித்தின் ‛ரெட்', போன்ற படங்களை இயக்கியவர் சிங்கம் புலி. தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காணப்படுகிறார்.

நடிகர் விமல், பிந்துமாதவி நடிப்பில் வெளியான தேசிங்குராஜா படத்திலும் இவர் காமெடியில் கலக்கி இருப்பார். இறுதியாக வெளியான அரண்மணை 4 படத்திலும் நடித்திருப்பார்.

இந்நிலையில், இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்கு நிதி தேவைப்படுவதாகவும் கூறி பேஸ்புக்கில் அவர் பெயரில் போலி கணக்கு உருவாக்கி நிதி திரட்டி வந்துள்ளனர். இதுபற்றிய தகவல் சிங்கம் புலியின் கவனத்திற்கு வர உடனடியாக அதை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தனது பெயரில் போலியான முகநூல் பக்கம் ஆரம்பித்து ஒரு சிலர் தனக்கு உடல்நலம் இல்லை என பணம் வசூல் செய்வது குறித்து கேள்விப்பட்டேன். எனக்கு உடல்நலம் இல்லை என்பது முழுக்க முழுக்க பொய், நான் நன்றாக தான் இருக்கிறேன், நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, எனவே இது போன்ற போலியான விளம்பரங்களை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார். 

From Around the web