இதோடு எல்லாத்தை முடிச்சு கோங்க., பிரதீப் ஆண்டனியின் திடீர் பதிவு வைரல்!!!
அருவி, வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் பிரபலமானவர் தான் பிரதீப் ஆண்டனி. அதன்படி பிக் பாஸ் சீசன் 7ல் சிறப்பாக விளையாடி வந்த இவருக்கு கமல்ஹாசன் ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றி இருந்தார். இவ்வாறு பிரதீப்பிற்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலர் தங்களது ஆதரவுகளை பல வகையில் தெரிவித்து வந்தனர்.
இப்படி இருக்கையில் பிரதீப் ஆண்டனி தனது சோசியல் மீடியாவில் பக்கத்தில் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது இதுவரை எனக்காக போறவன் வரவன் கிட்ட சண்டை போட்டு, வீடியோஸ் எல்லாம் ட்ரெண்டாக்கி உங்க அன்பை கொடுத்தது போதும். அதற்கெல்லாம் மிகவும் நன்றி. ஆனால் நான் சோகமாக இல்லை, நீங்களும் சோகமாக இருக்காதீர்கள், ஜாலி பண்ணலாம். வன்மம் போதும் முடிச்சுக்கலாம்.., அநியாயத்துக்கு அநியாயம் பண்றீங்க என்று ரசிகர்களுக்காக நக்கலாக பதிவிட்டுள்ளார்.