அஜித் ரசிகர்களுக்காக காத்திருக்கும் டபுள் ட்ரீட்- படக்குழு சூசகம்..!

 
நடிகர் அஜித்

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் தொடர்பாக இரண்டு அப்டேட்டுகளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. கொரோனா பிரச்னை, ஊரடங்கு விதிகள், சினிமா படப்பிடிப்புக்கு தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வலிமை படம் தாமதமாகி வருகிறது.

ஆனால் இதுவரை படம் தொடர்பாக ஒரு சின்ன அப்டேட் கூட வெளியாகவில்லை. கொரோனா முதல் அலை முடிந்த பிறகு, பல்வேறு கோலிவுட் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வைரல் செய்தனர். தேர்தல் பிரசாரத்திற்கு அரும் அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள், கலை நிகழ்வுகள் என்று எங்கு பார்த்தாலும் பலரும் வலிமை அப்டேட்டை கேட்டு படக்குழுவுக்கு நெருக்கடி அளித்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம் வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அந்த முடிவை கைவிட்டது படக்குழு. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இதுவரை படம் தொடர்பான ஒரு தகவல் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் வலிமை பட அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் என இரண்டு அம்சங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஏகத்துடன் காத்திருக்கின்றனர்.

From Around the web