வாடிவாசல் பணிகள் தொடக்கம்..? பிரபலம் வெளியிட்ட ட்வீட்..!

 
வாடிவாசல் பணிகள் தொடக்கம்..? பிரபலம் வெளியிட்ட ட்வீட்..!

நடிகர் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டதாக முக்கிய பிரபலம் ஒருவர் ட்வீட் பதிவு செய்துள்ளார்.

அசுரன் படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதற்கு முன்னதாகவே சூர்யாவுடன் வாடிவாசல் படத்திற்கான பணிகள் துவங்க திட்டமிடப்பட்டு இருந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தால் திட்டமிட்டபடி பணிகளை தொடங்க முடியாமல் போனது.


மேலும், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படங்களில் சூர்யா பிஸியாகிவிட வாடிவாசல் படத்திற்கான பணிகள் மேலும் தாமதமானது. இதற்கிடையில் சூரி நடிக்கும் பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் வெற்றிமாறன்.

தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வாடிவாசல் படத்திற்கான இசையமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் வாடிவாசல் என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்துள்ளனர். 

From Around the web