லியோ படத்துக்குள் வந்த பிரபல நடிகை- லிஸ்டு பெருசா போய்டே இருக்கு..!!

லியோ படத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிரபலங்கள் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அந்த வகையில் புதியதாக இணைந்துள்ள பிரபலம் குறித்து தெரிந்துகொள்வோம்.
 
leo movie

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் ‘லியோ’. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், சஞ்சய் தத், கவுதம் மேனன், நரேன், ஜோஜூ சார்ஜ், ஜாபர் சாதிக், ஸ்வாதிஷ்டா என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

ரூ. 500 கோடி பொருட்செலவில் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் படத்திற்கான அனைத்துவிதமான ஷூட்டிங் பணிகளும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. தற்போது மேலும் ஒரு பிரபலம் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார்.

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் த்ரிஷ்யம் 2. இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பாராட்டுக்களை பெற்றவர் சாந்தி மாயாதேவி. இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு வழக்கறிஞர் தான். தற்போது இவரும் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார்.

நடிகை சாந்தி மாயாதேவி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு  லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் அவர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘ராம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From Around the web