சர்தார் பட இயக்குனருக்கு டும் டும் டும்..!! 

 
1

கடந்த 2018 ஆம் ஆண்டு இரும்புத்திரை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன்.  இதில் விஷால் நாயகனாக நடித்த நிலையில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். 

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்தார்.2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் கல்வியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசியது. 

1

இதனையடுத்து சர்தார் படத்தை இயக்கினார்.இதில் கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் மற்றும் சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மாதம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் எளிமையாக இன்று ( பிப்ரவரி 12 ) திருமணம் நடந்து முடிந்து உள்ளது. 

இந்த ஜோடிக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

From Around the web