வசூலில் சாதனை படைத்து வரும் ‘தசரா‘ – இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த பரிசு…!

 
11

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியான படம் ‘தசரா‘. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இப்படம் வெளியாகி ஆறு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி எட்டியுள்ளதாக இப்படக்குழு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி படக்குழுவினர் அனைவருக்கும் 10 கிராம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குனருக்கு BMW காரை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர்.  தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web