கொரோனா பரவல் எதிரொலி: சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு..!

 
கொரோனா பரவல் எதிரொலி: சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு..!

கொரோனா இரண்டாவது அலை எதிரொலியாக டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்திட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, குறிப்பிட்டளவில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்தாண்டை போலவே தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்தே வண்ணமே உள்ளன. தற்போது இதை கருத்தில் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அந்த வகையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையும், தடுப்பூசியும் போட்டு கொண்ட பின்னர் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை சின்னத்திரை மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 

From Around the web