‘யானை முகத்தான்’ டிரெய்லர் வெளியீடு !
மலையாள முன்னணி இயக்குனரான ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யானை முகத்தான்’. இந்த படத்தில் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் கருணாகரன், ஊர்வசி, ஹரீஷ் பெராடி, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பரத் சங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் யோகிபாபு விநாயகர் கடவுளாகவும், அவரது பக்தனாக ரமேஷ் திலக்கும் நடித்துள்ளனர். குறிப்பாக இந்த டிரெய்லருக்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.