ஹரி - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘யானை’- ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

 
அருண் விஜய் 33 படக்கூட்டணி

ஹரி - அருண் விஜய்யை கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘யானை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமர்ஷியல் சினிமா இயக்குநர் தன்னுடைய மைத்துனர் அருண் விஜய்யை வைத்து முதன்முறையாக படம் இயக்கி வருகிறார். இதனுடைய ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த படத்துக்கு ‘யானை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, கே.ஜி.எஃப் புகழ் கருடா ராம், ராதிகா, சினேகன், யோகி பாபு, சினேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கொரோனா காலக்கட்டத்தால் தடைப்பட்டு போன படப்பிடிப்பு கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் யானை படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில் இதனுடைய இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன. விரைவில் திரைக்கு கொண்டு வரும் நோக்கில் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு நான்கு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி நடிகர்கள் ஆர்யா, அதர்வா, சிபி ராஜ், சாந்தனு, விக்ரம் பிரபு, பிரசன்னா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், அறிவழகன், நடிகைகள் வேதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ்,நிக்கி கல்ராணி,ரெஜினா, மகிமா நம்பியார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் சமூகவலைதளத்தில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

From Around the web