அருண் விஜய் கொடுத்த யானை பட அப்டேட்..!
ஹரி இயக்கத்தில் அவருடைய மைத்துனரும் நடிகருமான அருண் விஜய் நடித்து வரும் ‘யானை’ படம் குறித்த அப்டேட்டை அவரே வெளியிட்டுள்ளார்.
முதன்முறையாக மைத்துனர் ஹரி இயக்கும் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். யானை என்கிற பெயரில் தயாராகி வரும் இப்படம் அருண் விஜய்யின் 33-வது படமாக தயாராகி வருகிறது.
இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு கோபுநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்துப் பின்னணியில் தயாராகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது.
தற்போது நடிகர் அருண் விஜய் இப்படம் தொடர்பாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி யானை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)