எலான் மஸ்கின் முன்னாள் மனைவிக்கு பிரபல இளம் நடிகருடன் நிச்சயதார்த்தம்..!

 
1

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீள நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது. இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய ட்விட்டர் ப்ளூ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

Elon-Musk

அதன்பிறகு இந்த ட்விட்டரை தனக்கே உரிய பாணியில் பல மாற்றங்களை செய்து செய்திகளில் இடம்பிடித்தார். மேலும் தற்போது ட்விட்டர் தனது பெயரையும் லோகோவையும் மாற்றி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இனி டிவிட்டர் எக்ஸ் என அழைக்கப்படும். லோகோவும் நீல பறவையிலிருந்து எக்ஸ் சின்னமாக மாறியது.

இந்த விஷயம் ஒருபுறம் இருக்க, இப்போது அவரது முன்னாள் மனைவி தலுலா ரிலேவுக்கு பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எலான் மஸ்க், தலுலா ரிலே தம்பதி 2016-ல் விவாகரத்து செய்து கொண்டனர்.

தலுலா ரிலே தன்னைவிட 4 வயது இளையவரான ‘கேம் ஆப் திரோன்ஸ்’ புகழ் தாமஸ் பிராடி சாங்ஸ்டரை திருமணம் செய்ய உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 



கடந்த இரண்டு வருடங்களாக தலுலா ரிலே, தாமஸ் பிராடியுடன் டேட்டிங் செய்து வருகிறார். ரிலே தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது முன்னாள் மனைவி மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவதை அறிந்த எலான் மஸ்க், சிவப்பு இதயம் கொண்ட எமோஜியுடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மறுபுறம், தாமஸ் பிராடி சாங்ஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவர்களது நிச்சயதார்த்தம் குறித்து தெளிவுப்படுத்தி உள்ளார். ஆனால் அவர்களின் திருமணம் எப்போது என்று தெரியவில்லை.

From Around the web