விரைவில் தயாராகும் மரகத நாணயம் பார்ட்- 2..!

 
மரகத நாணயம் 2

கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.

ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘மரகத நாணயம்’. நகைச்சுவை கலந்த திகில் படமாக வெளியான இது தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்தது.

இதன் இயக்குநர் சரவன் அடுத்ததாக எந்த படத்தையும் இயக்காமல் நீண்ட காலமாக இருந்தார். தற்போது சத்யஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அதர்வா நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதர்வா படத்தை முடித்த பிறகு, தானே அந்த படத்தையும் இயக்கவுள்ளதாக சரவன் கூறியுள்ளார்.

விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. மரகத நாணயம் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளது. இந்த படத்திற்கான கதையை டில்லி பாபு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web