தீபாவளி ரிலீஸ் ரேஸில் இணைந்த ஆர்யா - விஷாலின் எனிமி..!

 
ஆர்யா மற்றும் விஷால்

இரண்டாவது முறையாக ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழில் அரிமா நம்பி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். இவருடைய இயக்கத்தில் இருமுகன், நோட்டா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர் ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் மிருனாளினி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், தம்பி ராமைய்யா, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை, ஹைதராபாத் துபாய் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.


முன்னதாக இந்த படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பில் சில மார்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எனிமி படம் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி நாளில் வெலியாகும் என ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

From Around the web