சற்றும் எதிர்பார்க்காத அறிவிப்பு கொடுத்து திக்குமுக்காடச் செய்த எதிர்நீச்சல் குழு...!!

நடப்பு வாரம் முதல் எதிர்நீச்சல் தொலைக்காட்சித் தொடர் இனிமேல் ஞாயிற்றுக் கிழமை நாட்களிலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.
 
ethir neechal serial

தொலைக்காட்சி பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்த சீரியல் என்றால் ‘எதிர்நீச்சல்’ தான். மாரிமுத்து, கனிகா, ப்ரியதர்ஷ்னி, சத்யப்ரியா, ஹரிப்ரியா, கமலேஷ் என பலரும் நடித்து வருகின்றனர்.

ஆணாதிக்க மனோநிலை, பெண் அடிமைத்தனம் போன்ற போன்ற சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை பதிவு செய்யும் விதத்தில் எதிர்நீச்சல் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில் இந்த தொடரில் கட்டாய திருமணம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பானது. அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

தற்போது வரை திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இனிமேல் நடப்பு வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. எதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.

அண்மையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சன் டிவி டி.ஆர்.பி-யில் எதிர்நீச்சல் தொடர் முதல்நிலையை அடைந்தது. அதற்கு பிறகு தான் தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. தொடர்ந்து டி.ஆர்.பி-யில் முதல்நிலையை தக்கவைக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


 

From Around the web