இதுதான் ‘எதிர்நீச்சல்’ மதுமிதாவின் கணவரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
 

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் கதாநாயகி மதுமிதாவுக்கு திருமணமாகிவிட்டதாக கூறி சமூகவலைதளங்களில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
 
madhumitha. h

கோலங்கள் சீரியல் மூலம் டி.வி. துறையில் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். இவர் தற்போது இயக்கி வரும் தொடர் எதிர்நீச்சல். சன் தொலைக்காட்சியில் வாரந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழ் சீரியலுக்கான டி.ஆர்.பி-யில் முதலிடத்தில் இந்த தொடர் தான் இருக்கிறது.

எதிர்நீச்சல் தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் மதுமிதா. ஹெச். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரியாத வரம் வேண்டும் தொடரில் நடித்தார். அதையடுத்து எதிர்நீச்சல் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவருடைய எதார்த்தமான நடிப்புக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். சமூகவலைதளங்களில் கூட இவருக்கு ஆர்மி போன்ற பக்கங்கள் உருவாக்கப்பட்டு, அவ்வப்போது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

ethirneechal madhumitha

 இந்நிலையில் அண்மைக்காலமாக மதுமிதாவின் கணவர் இவர்தான் என்று கூறி சமூகவலைதளங்களில் ஒரு போட்டா உலா வருகிறது. அந்த புகைப்படத்தில் மதுமிதா ஒருவருடன் நட்பு ரீதியான நெருக்கத்தில் இருக்கிறார். இதை பார்த்து பலரும், நடிகை மதுமிதாவின் கணவர் இவர்தான் என்று குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பான உண்மை நிலையை ஆராய்ந்த போது, மதுமிதாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் அதேசமயத்தில் அவருடன் அந்த நிழற்படத்தில் இருக்கும் நபர் யாரென்று தெரியவில்லை. எனினும், இதை பார்க்கும் பலர் அந்த நபர் தான் மதுமிதாவின் காரணம் என்று உறுதியாக நம்புகின்றனர்.

From Around the web