படம் ரிலீஸ்க்கு முன்பே அதிரடி காட்ட தொடங்கிய ஜவான்.. முதல் நாளில் 7 லட்சம் டிக்கெட்டுகளை விற்றுத் தீர்ந்தன..!

 
1

 அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’.நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப். 7ம் தேதி வெளியாகிறது. அண்மையில் சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அளவில் படத்தின் முதல் நாள் காட்சிகளுக்காக மட்டும் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் நாளுக்கு 3 லட்சத்துக்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை குவித்தது.அந்த வகையில் ‘ஜவான்’ படமும் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை எட்டும் என கூறப்படுகிறது. படத்தின் வரவேற்பை பொறுத்து ரூ.1000 கோடி வசூலை கடக்கலாம் என திரைவர்த்தகர்கள் கணித்துள்ளனர். முன்னதாக ‘பதான்’ ரூ.1000 கோடி வசூலை எட்டியது. ‘ஜவான்’ ஷாருக்கானுக்கு இரண்டாவது ரூ.1000 கோடி வசூலை பெற்று தருமா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

From Around the web