ஒரே லொகேஷனில் சமந்தா - நாகசைதன்யா இருந்தும் கூட..!! 

 
1

கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை சமந்தா திருமணம் செய்தார். நட்சத்திர ஜோடிகளான இவர்கள் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக வலம் வந்தனர்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க மாட்டார் என எதிர்பார்த்த நிலையில், அதற்குபின்பு தான் அதிகமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். பர்சனல் -  புரோபஸ்னல் என இரண்டையும் நன்றாக மென்டைன் செய்து வந்தார் சமந்தா. வாழ்க்கை நன்றாக போயிகொண்டிருந்த வேளையில் திடீரென இருவரின் விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.

இதன் பின்னர் இருவரும் அவர்களின் வேலையில் பிசியாக இருந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நாக சைதன்யா - சமந்தா இருவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளனர்.

ராமநாயுடு ஸ்டூடியோவில் இருவருக்கும் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் இருந்துள்ளது. இருவரும் ஒரே லொகேஷனில் இருந்தாலும் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல், ஷூட்டிங் முடிந்தபின் அவர்கள் தங்களின் காரில் ஏறி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web