தளபதி விஜய் எதிர்க்கட்சி தலைவராக மாறினால் கூட நான் மீசையை எடுத்துக் கொள்வேன்..!

 
1
காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன் ’ஜெயிலர்’ படத்தின் வசூலை ’லியோ’ முந்தாது என்று சவால் விட்டு, ஒருவேளை ’ஜெயிலர்’ படத்தின் வசூலை ’லியோ’ முந்தினால் நான் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். அதன்படி ’ஜெயிலர்’ படத்தின் வசூலை ’லியோ’ முந்தவில்லை என்பதும் அந்த எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீசை ராஜேந்திரன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது ’விஜய் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுவது சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘எனக்கு தெரிந்து அவர் நடைபயணம் செய்ய சாத்தியமில்லை, விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் போது மிகவும் சோர்வாக செல்கிறார், அவர் எப்படி தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்ய முடியும், அதற்கு வாய்ப்பு ரொம்ப குறைவு என்றும் அவர் தெரிவித்தார்

ஒருவேளை வாகனங்களில் வேண்டுமானால் தமிழக முழுவதும் பயணம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் நடை பயணம் செய்ய என்னை பொருத்தவரை சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலர் விஜய் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுவிடுவார் என்றும் குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவராகி விடுவார் என்றும் கூறி வருகின்றனர். அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை, ஒருவேளை ’ஜெயிலர்’ படத்திற்கு சொன்ன மாதிரி நான் மீண்டும் சவால் விடுகிறேன், விஜய் கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக மாறினால் நான் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று சவால் விட்டார். 

From Around the web