நான் நடிகர் கவினை அடித்தது கூட ஒரு ஸ்ட்ராட்டஜி தான் : பிரதீப் சொன்ன காரணம்!

 
1

பிரதீப் கவினை அடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. கவினை பிரதீப் அடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுவும் ஒரு ஸ்ட்ராட்டஜி தான் என்று தற்போது 7வது சீசனில் விசித்ராவிடம் பிரதீப் ஆண்டனி கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்லியாவை காதலித்ததால் கவின் மீது நெகட்டிவ் இமேஜ் இருந்தது, வெளியே உள்ள எல்லோரும் கவினை தப்பா பேசினார்கள், அதை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் அவனை அடித்தேன் என்று பிரதீப் ஆண்டனி கூறினார். கவினை நான் அடித்த பிறகு எல்லோரும் கவினின் நெகட்டிவ்வை மறந்துவிட்டு என்னைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள், என்னை தான் நெகட்டிவ் ஆக பார்த்தார்கள், கவின் பாசிட்டிவ் ஆகிவிட்டான் என்றும் இந்த ஸ்ட்ராட்டஜிக்கு தான் நான் அவனை அடித்தேன் என்றும் கூறினார்.

ஆனால் விசித்ரா அதனை ஏற்று கொள்ளாமல் ஒருத்தரை கைநீட்டி அடிப்பது தவறு என்றும் இதை கவின் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டான் என்றும் கூறினார். ஆனால் பிரதீப் ’என்னை அவனுக்கும் அவனுக்கு என்னையும் நன்றாக தெரியும், அதனால் அவன் என்னை தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டான், நான் யோசித்து அந்த ஸ்ட்ராட்டஜி சரியாக வொர்க்-அவுட் ஆனது என்று கூறினார். இதனை அடுத்து ரசிகர்கள் அப்பவே பயங்கரமாக யோசித்து ஸ்ட்ராட்டஜியை பிரதீப் செயல்படுத்தி இருக்காரே என்று ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.


 

From Around the web