நான் தொடர்ந்து 5 வெற்றிப்படங்களில் நடித்தும் ஒருவர் கூட அழைக்கவில்லை - நடிகை கிரண்..! 

 
1

சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிரண். அதனைத் தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் , வின்னர், தென்னவன், நியூ, சகுனி, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கிரணுக்கு வயதானதாலும், உடல் எடை கூடியதாலும் படிப்படியாக பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், செயலி ஒன்றை தொடங்கி, அதில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட சம்பாதிக்க ஆரம்பித்தார் கிரண்.

Kiran

தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி உள்ள கிரண், 42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். நடிகை கிரணின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின.

இந்த நிலையில் நடிகை கிரண், தவறான முடிவு எடுத்ததால் வாழ்க்கை நாசமானது என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரண் அளித்துள்ள பேட்டியில், “நான் ஒருவரை பைத்தியமாக காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மனம் உடைந்து போனேன். சினிமாவில் சில காலம் நான் இல்லாமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வியே காரணம். அப்போது சரியாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்கு சென்று இருப்பேன்.

Kiran

ஆனால் தவறான முடிவு எடுத்ததால் வாழ்க்கை நாசமானது. இப்போது நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் அழைக்கவில்லை. நான் தொடர்ந்து 5 வெற்றிப்படங்களில் நடித்து இருந்தும் ஒருவர் கூட படங்களில் நடிக்க அழைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. புதிய இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

From Around the web