பரிசு பெறும்போது கூட என் நகங்களுக்கு இடையில் சாணத்தின் துகள்கள் இருந்தன - நித்யா மேனன் பதிவு...!

 
1

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நித்யா மேனன் தற்போது "தலைவன் தலைவி" திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான ஒரு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நித்யா, ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் அவரது சினிமா அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறினார். "இட்லி கடை" படத்தில் சாணம் கையால் வாரும் காட்சியைப்பற்றி கேட்டபோது, "கண்டிப்பா பண்ணுவேன்!" என உறுதியாக பதிலளித்தார்.

மேலும், “நேஷனல் அவார்டு வாங்குவதற்குமுன், அந்த சாணக் காட்சியை ஷூட் பண்ணியதைத்தான் நினைவில் வைத்துக்கொள்கிறேன். பரிசு பெறும்போது கூட என் நகங்களுக்கு இடையில் சாணத்திலிருந்த துகள்கள் இருந்தன,” என்று வெளிப்படையாகக் கூறினார். “அது ஒரு சிறந்த அனுபவம். அதுவே வாழ்க்கை. நாம ஒரே மாதிரி இருக்காமல், பலவித அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் நேர்மையான பதிலும், வாழ்க்கையின் உண்மையான தருணங்களை பகிர்ந்த விஷயமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த உரையாடல் வேகமாக பரவி வருகிறது.மேலும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

From Around the web