எல்லாமே தோல்வி..! கல்யாணம் பண்ணுன நேரமே சரியில்ல - சமந்தா ஓபன் டாக்..!

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார் சமந்தா. முதலில் மாடலிக் செய்த இவர் பின்னர் படங்களில் நடித்து டாப் நாயகியாக வளம் வருகிறார்.
உடல் நல குறைவால் சற்று நடிப்பில் இருந்து விலகி இருந்த சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். தற்போது. பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வரும் 7 - ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இவர் நடிப்பில் வெளியான 'சாகுந்தலம்', 'குஷி' , 'யசோதா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த பின்னடைவு குறித்து சமந்தா பகிர்ந்துள்ளார்.
அதில், " உண்மை தான் நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். சில விஷயங்கள் எனக்கு சரியாக அமையவில்லை, தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இனி வரும் படங்களாவது சமந்தாவிற்கு ஒரு நல்ல கம் பேக் கொடுக்குமா என்று பார்ப்போம்.