யாரும் பார்த்திராத ராஷ்மிகாவின் வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலன்..!

 
யாரும் பார்த்திராத ராஷ்மிகாவின் வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலன்..!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தார் என்கிற வீடியோவை அவருடைய முன்னாள் காதலர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமா மூலம் உச்சத்துக்கு சென்றவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ‘சுல்தான்’ படம் கால்பதித்துள்ளார். அவருக்கு தமிழ் ரசிகர்களும் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர்.

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்கிற படம் மூலம் அறிமுகமானவர். அப்போது அதே படத்தில் நடித்த கன்னட நடிகர் ரக்‌ஷித் செட்டியும் ரக்‌ஷிதாவும் காதலில் விழுந்தனர். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். எனினும், தற்போதும் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடினார். கிரிக் பார்ட்டி படத்துக்காக அவர் ஆடிஷன் செய்யப்பட்ட வீடியோவை நடிகர் ரக்‌ஷித் செட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் எப்படி இருந்தார்., தற்போது அவர் எவ்வாறு உள்ளார். இந்த வெற்றிக்கு அவருடைய உழைப்பு தான் காரணம். அவரை நினைத்து பெருமை கொள்வதாக தன்னுடைய பதிவில் ராஷ்மிகா குறித்து குறிப்பிட்டுள்ளார் ரக்‌ஷித் செட்டி. இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது
 

From Around the web