இந்த ஒரு படத்தை தவிர மற்ற எல்லா படங்களும் எனக்கு நஷ்டத்தை மட்டும் தான் கொடுத்தது - விஜய்சேதுபதி..! 

 
1
விஜய் சேதுபதியும் ’ஆரஞ்சு மிட்டாய்’ ’மேற்கு தொடர்ச்சி மலை’ ’லாபம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த நிலையில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் விமர்சன ரீதியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், வர்த்தக ரீதியில்  வெற்றி பெறவில்லை. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி கூறிய போது திரைப்படங்களை தயாரித்ததால் எனக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை, ஒரு தயாரிப்பாளராக எனக்கு மோசமான அனுபவங்கள் தான் கிடைத்தது, அதில் தவறு முழுவதும் என்னுடையது தான்.

ஒரு தயாரிப்பாளராக நான் அறிவில்லாமல் நடந்து கொண்டேன், ஒரு தயாரிப்பாளராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருந்தது,  ஒவ்வொரு முறையும் நான் திரைப்படங்கள் தயாரித்து கடனாளியாக தான் ஆகி உள்ளேன். அந்த கடனை அடைத்த பிறகு வேற ஒரு படம் தயாரிக்கின்றேன். இப்போது கூட ‘லாபம்’ படத்தினால் ஏற்பட்ட கடனை இன்னும் அடைத்து கொண்டிருக்கிறேன். இந்த கடனை அடைத்த பிறகு தான் அடுத்ததாக ஒரு படம் தயாரிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் படங்கள் தயாரித்ததில் எனக்கு சில நல்ல அனுபவங்கள் கிடைத்தது, படம் தோல்விக்கு நான் முதல் காரணமாக இருந்தாலும் அந்த அனுபவத்தை வைத்து நான் எதிர்காலத்தில் நல்ல படம் தயாரிப்பேன். குறிப்பாக ’முகில் ’என்ற படத்தை ஒரு தயாரித்தேன். அந்த படத்தில் நானும் என் மகளும் நடித்திருந்தோம். அந்த ஒரு படம் மட்டும் தான் எனக்கு லாபத்தை பெற்று கொடுத்தது, மற்ற எல்லா படங்களும் எனக்கு நஷ்டம் தான்’ என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

From Around the web