மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியரை தூக்கில் போட வேண்டும்: விஷால் ஆவேசம்..!

 
விஷால்

சென்னை தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்த ஆசிரியரை ராஜகோபாலனை தூக்கில் போட வேண்டும் என நடிகர் விஷால் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரிடம் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்ததாக கூறி குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ராஜகோபாலன் கைது செய்ய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக பல தரப்பினர் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகர் விஷால் இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், பள்ளியில் பாலியல் சம்பவங்கள் நடைபெறுவது தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. மேலும், அந்த பள்ளியை மூட வேண்டும் என்பதையும் நமக்கு வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறை கூட மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எழாத வண்ணம் நடவடிக்கைள் அமைய வேண்டும். அதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட ராஜகோபாலன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எனது நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

From Around the web