பாலிவுட்டில் பரபரப்பு..!! நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்..!
Dec 20, 2021, 17:06 IST
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு புகார் எழுந்தது. பனாமாவில் முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியலை ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகை வெளியிட்டது. அதில், நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் உட்பட 500 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 - cini express.jpg)