ஈஸ்வரி கொளுத்தி போட்ட பிரச்சனையால் எழில் செழியனுக்கு முற்றும் சண்டை..!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ஹோட்டல் ஓனரிடம் கவுன்சிலர் செய்த பிரச்சனை தொடர்பாக பேசுகிறாள் பாக்யா. அதற்கு அவன் என்னால இந்த விஷயத்துல எதுவும் பண்ண முடியாது. நான் இந்த ஏரியா ஆளு. என்னால அவரை பகைச்சுக்க முடியாது. அவுங்க வர வேணாம் நினைச்சா, நீங்களே நேரடியாக சொல்லிடுங்க என கூறி விடுகிறான். இதனால் பாக்யா என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறாள்.
இதனையடுத்து இனியா அங்கு வருகிறாள். அவளிடம் நீ வீட்ல எதுவும் பிரச்சனை பண்ணலையே என கேட்கிறாள். அதற்கு அவள் தான் பேசியதை பற்றி சொல்கிறாள். ரெஸ்டாரண்ட்டுக்கு நீ பணம் வாங்குனியா அம்மா எனவும் கேட்கிறாள். அதற்கு பாக்யா, ஆமாம் இனியா. நான் பணம் வாங்குனேன். ரெஸ்டாரண்ட் பிரச்சனைக்கு அப்பறம் உன் மாமனார் நம்ம வீட்ல வந்து பேசுனாரு. பணம் தர்றேன் சொல்லிட்டே இருந்தாரு. எனக்கும் கடன் இருந்தது. அதுனால தான் பணம் வாங்குனேன் என சொல்கிறாள்.
அப்போது செல்வி வந்து அப்படி ஒன்னும் லட்சக்கணக்குல பணம் கொடுத்துடலை இனியா. நமக்கு நஷ்டம் தான் என சொல்கிறாள். அதனை தொடர்ந்து பாக்யா அவளை இதைப்பற்றி எல்லாம் நீ யோசிக்காத என சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறாள். இந்தப்பக்கம் அமிர்தா கிச்சனில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது, எழில் வந்து பேசுகிறான். நீ காலைல செஞ்ச சாப்பாடு நல்லாத்தான் இருந்தது. பாட்டி பேசுனது எதையும் மனசுல வைச்சுக்காத என சொல்கிறான்.
அப்போது கரெக்டாக அங்கு வரும் ஈஸ்வரி, என்னடா உன் பொண்டாட்டியை நான் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்றியா என மற்றொரு பிரச்சனையை ஆரம்பிக்கிறாள். அப்போது எழிலும் பதிலுக்கு பேச, இந்த வீட்ல எல்லா வேலையும் பார்க்குற அமிர்தாவை திட்டுறீங்க. ஒரு வேலையும் பார்க்காத ஜெனி பத்தி எதுவும் சொல்றது இல்லையே என கேட்கிறான். அந்த சமயத்தில் கரெக்டாக தண்ணீர் எடுக்க வரும் செழியன் இதனை கேட்டுவிட்டு மாடிக்கு திரும்பி போகிறான்.
அதனை தொடர்ந்து அங்கு பாக்யா வர, என்ன பிரச்சனை என கேட்கிறாள். உடனே ஈஸ்வரி வாம்மா. எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர்ற, போறான்னு ஒன்னும் தெரியலை. உன் இஷ்டத்துக்கு திரியுற. இந்த வீட்ல உனக்கு இருக்க விருப்பம் இல்லை. அதான் இப்படியெல்லாம் பண்ற என்கிறாள். அதற்கு பாக்யா ஆமாம் அத்தை. எனக்கு இந்த வீட்ல இருக்க பிடிக்கலை. ஒரு காலத்துல இந்த வீட்டு செலவுக்காக கையேந்தி நின்னேன். ஆயிரம் கேள்வி கேட்டு என்னை அசிங்கப்படுத்தி பணம் கொடுத்தாங்க.
இப்ப நான் சுயமா நிக்கிறேன். இப்போ என் பசங்க கிட்ட என்னால கையேந்தி நிற்க முடியாது. எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் என உறுதியாக சொல்கிறாள். ஈஸ்வரி அவளிடம் பதில் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து போகிறாள். இதனிடையில் ஜெனியிடம் வந்து அவளை பற்றி எழில் குறை சொன்னதை பற்றி கூறுகிறான் செழியன்.
அந்த சமயத்தில் கரெக்டாக அங்கு வருகிறாள் பாக்யா. முதலில் நார்மலாக பேசிவிட்டு அமிர்தாவுக்கு கொஞ்சம் உதவி பண்ணும்மா என ஜெனியிடம் சொல்லிவிட்டு போகிறாள். இதனால் கடுப்பாகும் செழியன், அம்மா போனதும் நம்ம உன் வீட்லயே இருந்திருக்கலாம் என்கிறான். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.