மீண்டும் ஓடிடி-யில் ரிலீஸாகும் ஃபகத் பாசில் படம்- இதுவேற லெவல் அப்டேட்..!

 
மாலிக் திரைப்படம்

நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் பாசில், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாலிக்’. மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாததால் படம் ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 15-ம் தேதி ‘மாலிக்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கொரோனா பரவல் காரணமாக ஃபகத் பாசில் நடிப்பில் உருவான ‘சி யூ சூன்’, ‘ஜோஜி’, ‘இருள்’ என பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்பட்டன. இந்த வரிசையில் தற்போது மாலிக் படமும் இணைந்துள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

From Around the web