ஃபகத் பாசிலால் செல்வராஜூக்கு வந்த சோதனை..!

 
1

மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மாரி செல்வராஜின் படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது இப்படத்தில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர் ரஹ்மான் இசை, வடிவேலுவின் நடிப்பு என இப்படம் மேலும் மெருகேறியது. அதன் காரணமாகவே இப்படத்திற்கு உச்சகட்டமாக எதிர்பார்ப்பு இருந்தது.

Fahad

இந்த நிலையில், ரத்னவேலு என்ற ரோலில் நடித்த ஃபகத் பாசிலை ரசிகர்கள் கொண்டாடி வருவது தான் அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபகத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை மாஸாக எடிட் செய்து ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். என்னதான் ஃபகத் பாசிலின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் மறுபக்கம் ரத்னவேலு கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடுவது சரியல்ல என்பது தான் பலரின் கருத்தாக இருக்கின்றது.

சாதி வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என சொல்லும் மாமன்னன் மற்றும் அதிவீரனின் கதாபாத்திரத்தை விட்டுவிட்டு ரசிகர்கள் சாதி வெறியோடு திரிந்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடுவது தவறு என சிலர் பேசி வருகின்றனர்.


 


இந்நிலையில் மாரி செல்வராஜ் வடிவேலுவின் மாமன்னன் கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ஃபகத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடுவது அவருக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கின்றதாம். மேலும் இது வெறும் எடிட் செய்வதோடு நின்றுவிட வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாக தற்போது இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web