”கள்ளக்காதல்... கருக்கலைப்பு.. இவையெல்லாம் என்னை உடைக்காது: சமந்தா..!

நாக சைத்தன்யாவுடன் நடந்த விவகாரத்துக்கு தன்னை காரணமாக குறிப்பிட்டு குற்றஞ்சாட்டுவதை நடிகை சமந்தா கண்டித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவுக்க்கும் சமந்தாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தனர்.
சமீபமாக ஹைதராபாத்தில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து அவர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டதற்கு பக்குவத்துடன் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் தாங்கள் மனம் சம்மத்துடன் பிரிவதாக சமந்தா மற்றும் நாக சைத்தன்யா சமூகவலைதளங்களில் அறிவித்தனர். இது சினிமா உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த விவகாரத்துக்கு சமந்தா தான் காரணம் என்கிற தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கு விதத்தில் நடிகை சமந்தா சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், விவகாரத்துக்கு என்னை காரணமாக குறிப்பிட்ட போது, அதை எதிர்த்தவர்களுக்கு என்னுடைய நன்றி. என் சொந்த வாழ்க்கையில் நீங்கள் காட்டிய அக்கறை என்னை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. முன்னதாக வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக கூறினார்கள், பிறகு கருக்கலைப்பு செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர். என்னை சந்தர்ப்பவாதி என்றும் குறிப்பிட்டனர்.
திருமண முறிவு என்பது மிகப்பெரிய வலி நிறைந்தது. அதை நான் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது இதுபோன்ற தாக்குதல்கள் இடைவெளி இல்லாமல் தொடர்கிறது. ஒன்றை மட்டும் கூறுகிறேன், இதுவெல்லாம் என்னை எதுவும் செய்துவிட முடியாது. என்னை உடைக்காது என சமந்தா பதிவிட்டுள்ளார்.