மலையாள சினிமாவில் காமெடிக்கு பஞ்சம்- நடிகர் ப்ரித்விராஜ் ஓபன் டாக்..!
 

 
ப்ரித்விராஜ்

கடந்த இரண்டு வருடங்களாக மலையாள சினிமாவில் மகிழ்ச்சியான படங்களே வரவில்லை எனவும் காமெடி சினிமாக்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதாக நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தனு பாலக் இயக்கத்தில் ப்ரித்விராஜ், அதிதி பாலன், லக்ஷ்மி ப்ரியா சந்திரமவுலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோல்டு கேஸ்’. வரும் 30-ம் தேதி இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரபல யூ-ட்யூப் சேனலுக்கு நடிகர் ப்ரித்விராஜ் அளித்த நேர்காணலின் போது, அடுத்து அவர் இயக்கவுள்ள ‘ப்ரோ டேடி’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள அவர், மலையாள சினிமாவில் கிரைம் த்ரில்லர் படங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியான ஒரு படம் மலையாள சினிமாவில் வரவில்லை. குடும்பப் படங்களை எடுப்பதற்கு நிறைய வேலைகள் இருப்பதால் அதுபோன்ற படங்களை யாரும் எடுப்பதில்லை.

சமீபத்தில் என்னை சந்திக்க வந்த இரண்டு எழுத்தாளர்கள் ப்ரோ டேடி படத்தின் கதையை சொன்னார்கள். எனக்கு பிடித்திருந்தது. உடனடியாக மோகன்லாலுக்கு வீடியோ கால் செய்து, கதை சொன்னேன். அவருக்கும் பிடித்துவிட்டது. இதுதான் ப்ரோ டேடி படத்தின் தொடக்கம்.

லூசிஃபர் 2 படத்துக்கு நிறைய வேலைகள் உள்ளன. கொரோனா நெருக்கடியின் போது அதை செய்வதற்கு சாத்தியமில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பே அது எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது உண்மை. பிரமாண்டமான படம் என்பதால் அதற்கு நிறைய நேரம் தேவை என்று கூறினார் ப்ரித்விராஜ்.
 

From Around the web