பிரபல நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்..!!

 
1

பாட்டையா என்று அழைக்கப்படும் பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதிமணி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் ‘பாரதி’ மணி என அழைக்கப்பட்டார். ‘பாபா’, 'ஆட்டோகிராஃப்’,‘புதுப்பேட்டை’, ‘அந்நியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பாட்டையா என்று அழைக்கப்படும் மணி பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக உடல்நலக் குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று (நவ.16) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 

From Around the web