தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபல நடிகர்..!! 

 
1

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 23-ந் தேதி சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.

தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று  (7-ந் தேதி) தொடங்குகிறது.இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பாக்யராஜ் நேற்று அறிவித்தார்.

1

இவர் தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜும், அவரது அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் இன்று  வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். டைரக்டர்கள் சங்கத்தில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் 2 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாக்யராஜை எதிர்த்து போட்டியிடுவது குறித்து ஆர்.கே.செல்வமணி அணியினர் ஆலோசித்து வருகிறார்கள்.

From Around the web