கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் உயிரிழப்பு..!

 
கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் உயிரிழப்பு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் நிதிஷ் வீரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு தரப்பு மக்களும் இதனால் அவுதியுற்று வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையில் கொரோனாவால் தினசரி ஒருவராவது உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது.

நேற்றிரவு பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனாவால் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிதிஷ் வீரா இன்று கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதை தொடர்ந்து இன்று காலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் நிதிஷ் வீரா, வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனமீர்த்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web