விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்… ரசிகர்கள் அதிர்ச்சி!

 
1

தமிழில் எங்கேயும் எப்போதும் , ஜே. கே எனும் நண்பனின் வாழ்கை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சர்வானந்த்.2004  ஆம் ஆண்டு இடகுவா த்ரீக்கு என்னும் படத்தின் மூலமாக சினிமாதுறைக்கு வந்த சர்வானந்த், தொடர்ந்து கௌரி, ஷங்கர் தாதா எம்பிபிஎஸ், சங்கராந்தி போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தார். 2010ஆம் ஆண்டு சர்வானந்த் கதாநாயகனாக நடித்த பிரஸ்தானம் படம் இவரது வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல படங்கல் நடித்து முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் ஷர்வானந்த் பயணித்த ரேஞ்ச் ரோவர் ஃபிலிம்நகர் சந்திப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக விவரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது, விபத்து குறித்து குடும்பத்தினர் பதிலளிக்கவில்லை, ஆனால் நடிகரின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. காரில் அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதால், நடிகர் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷர்வானந்த் ரத்தக்காயங்களுடன் காணப்படும் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

From Around the web