மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் பிரபல நடிகர்..!! 

 
1

மகேந்திரன் இயக்கிய ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் அறிமுகமாகி 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன். கிளிஞ்சல்கள் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், விதி, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மௌன ராகம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இவரை மைக் மோகன் என்றும் அழைத்தனர்.

கடைசியாக தமிழில் 2008-ல் வெளியான சுட்டபழம் படத்தில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகினார். சமீப காலமாக மோகனை புதிய படங்களில் நடிக்க வைக்க அழைப்புகள் வந்தும் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார். இவர் நடிக்க உள்ள படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார். இவர் சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர். படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர் நடிகையர் விவரங்களை புத்தாண்டில் வெளியிடுகின்றனர்.

From Around the web