கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் உயிரிழப்பு..! திரையுலகினர் அதிர்ச்சி..!

 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் உயிரிழப்பு..! திரையுலகினர் அதிர்ச்சி..!

பல்வேறு பாலிவுட் படங்களிலும், தமிழில் ஒருசில படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை, முதல் அலையைக் காட்டிலும் வீரியம் மிகுந்ததாக உள்ளது.

இந்நிலையில் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய இழப்பு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழில் அஞ்சான் மற்றும் காலா படத்திலும் அவர் நடித்துள்ளார். நடிகர் பிக்ரம்ஜித் பன்வர்லால் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web