ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நேரில் ஆஜராக பிரபல நடிகருக்கு உத்தரவு!!

 
1

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர்.

இதன் மூலம் ரூ 2,438 கோடி பணம் வசூலித்தது தெரியவந்தது. ஆனால் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தானாக முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளரான ஹரீஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் அவரை கைது செய்தனர். அது போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

RK suresh

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருவதுடன், அவர்கள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீஸார் அறிவித்துள்ளனர்.. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல்ராஜ் என்பவர் சமீபத்தில் துபாய் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்.

அதேபோல ரூசோ என்பவரும் கைதான நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், பிரபல நடிகரும், பைனான்சியரும், தமிழக பாஜகவின் கலைப்பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷூக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதாவது, டெல்லி சோர்ஸ் மூலம், இந்த வழக்கை வலுவிழக்க செய்ய சுரேஷுக்கு ரூசோ 12 கோடி கொடுத்திருக்கிறார். ஆனால், பொருளாதார குற்றப்பிரிவில் உள்ள சில அதிகாரிகள் இதற்கு மறுத்ததால், அந்த திட்டத்தை அப்படியே நிறுத்திவைத்துள்ளார். அத்துடன், தான் கைநீட்டி வாங்கிய பணத்துடன் சுரேஷும், தலைமறைவானதாக கூறப்படுகிறது. எனவே, சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

ஆனால், அவர் வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியானது. இப்படிப்பட்ட சூழலில்தான், விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்கு பிறகு அவரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். விசாரணை வளையத்துக்குள் ஆர்.கே.சுரேஷ் கொண்டுவரப்பட்டால்தான், இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரமெல்லாம் தெரியவரும் என்கிறார்கள்.

RK suresh

முன்னதாக, ஆர்.கே.சுரேஷின் வழக்கறிஞர் சமர்ப்பித்த விளக்கங்களை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ஏற்க மறுத்துள்ளனர். அதற்கு பிறகுதான், சுரேஷை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர். சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதனை தொடர்ந்து, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசிஅம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டனர். ஏற்கனவே, பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இப்போது தமிழக பாஜகவின் கலைப்பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்கே சுரேஷூக்கு சம்மன் அனுப்பி உள்ளதால், பாஜகவுக்குள் பரபரப்பு நிலவி வருகிறது.

From Around the web