தளபதி விஜயை பாராட்டிய பிரபல நடிகர்..!! 

 
1

துல்கர் சல்மான் நடிப்பில் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் ‘குருப்’. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் தயாராகி உள்ளது.

1984 முதல் கேரள போலீசாரால் தேடப்பட்டு வரும் சுகுமாரா குருப் என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இப்படம் தொடர்பான விளம்பரப் பணிகளில் துல்கர் சல்மான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள துல்கர், “விஜய் ஒரு சூப்பர் ஹீரோ போன்றவர். அவரது நடனத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கமிங்’ பாடலில் விஜய்யின் நடனத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

துல்கர் சல்மான் தற்போது நடன இயக்குநர் பிருந்தா இயக்கிவரும் ‘ஹே சினாமிகா’ என்ற நேரடி தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

From Around the web