வகுப்பறையில் மனித மலம்-கொந்தளித்த பிரபல நடிகர்..!

 
1

 திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும்  மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். . இந்நிலையில், பள்ளி வகுப்பறைகளுக்கு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் மலம் பூசியும் குடிநீர் தொட்டி உடைத்த  சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராமமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த  மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் மேலும் அடிக்கடி மர்மநபர்கள் பள்ளியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வகுப்பறைகளுக்கு மலம்  தடவிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

பள்ளி வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலத்தை பூசிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தாடி பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “என்னடா ஜென்மங்கள் நீங்கெல்லாம் உங்களுக்கு அறிவே இல்லையா” என்று கேட்டுள்ளார்.

இது, பல்வேறு வளையதளங்களில் வைரலாகி வருகிறது. “தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால் நீங்கள் மனித மதத்தை அனைத்து பூட்டுகளிலும் பூசியது நினைத்தால் அருவருக்கத்தக்கதாக உள்ளது. தயவு செய்து இரு கரங்களையும் கூப்பி கேட்டுக்கொள்கிறேன, தயவுசெய்து தமிழக முதலமைச்சர் ஐயா மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த செயலில் ஈடுபட்ட மர்மன் அவர்களை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த வீடியோவில் தாடி பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

From Around the web