பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம்- பிரபல நடிகர் ட்வீட்..!

 
பஞ்சதந்திரம் 2

பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகுமா என்கிற ரசிகர்களின் கேள்விக்கு பிரபல நடிகர் தெரிவித்துள்ள பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் 2002-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் பஞ்சந்தந்திரம். இந்த படத்தில் சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் கதாநாயகியாக நடித்திருந்தனர்.

மேலும் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், நாகேஷ், மணிவண்ணன், ஊர்வசி, யூகி சேது, ஐஸ்வர்யா, சங்கவி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்ற இந்த படம், இன்றளவும் பலரும் விரும்பக் கூடிய படமாக இருந்து வருகிறது.

பல்வேறு ஹிட் படங்களில் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில், பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என அவ்வப்போது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஸ்ரீமன், பஞ்ச தந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் நடிகர் கமலஹாசன் மனது வைத்தால் மட்டுமே நடக்கும். ஆனால் படக்குழுவினருக்கு பஞ்சதந்திரம் 2 உருவாவதில் மகிழ்ச்சியாக தான் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நடிகர் ஸ்ரீமனின் பதிவை படிக்கும் நெட்டிசன்கள் சிலர், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள இந்தியன் 2 படத்தை கமல்ஹாசன் எடுத்து முடிக்கட்டும். அதற்கு பிறகு பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசலாம் என கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டுள்ளனர். 
 

From Around the web